என்னை பற்றி பேச எல்.முருகனுக்கோ,அண்ணாமலைக்கோ அருகதை இல்லை: ஆ.ராசா

என்னை பற்றி பேச எல்.முருகனுக்கோ, அண்ணாமலைக்கோ அருகதை இல்லை என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-22 12:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் ‌ சார்பாக பன்னாட்டு மாநாடு கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது ,  தாயகம் திரும்பிய மலையக தமிழருக்கான இயக்கத்தின் இன்றைய தினம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது எனவும் அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து 1983-க்கு பிறகு வந்த தமிழகத்தில் மலையகத்தமிழர்களும் அடங்குவர் எனவும் என்னென்ன உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் அதே நேரத்தில் நீலகிரிக்கு வந்த மலையக தமிழர்களுக்கு நில பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று இனம் பிரித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தருமாறு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பாக அந்த அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றவர், அந்த அறிக்கையில் முகாமில் இருக்கின்ற மலையக தமிழகத்தில் எத்தனை பேருக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்று என்பதை கண்டறிந்து அதனை அட்டவணைப்படுத்தி பின்னர் தமிழக அரசு இந்த ஆய்வை எப்படி மேற்கொள்கிறதோ? அதேபோல இலங்கையில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசு சார்பாக ஒரு ஆய்வு அறிக்கை தயார் செய்தார்.

அந்த இரண்டு அறிக்கையும் ஒன்று சேர்ந்தது போல ஏறத்தாழ இதே மாதிரியான எண்ணிக்கை ஆய்வறிக்கைகள் இடம் பெற்று இருக்கின்றன இதனை முதல்வரிடம் இரண்டு வாரத்துக்கு முன்பாக இந்த தரப்பட்டது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர்களோடு இருக்கின்ற எல்லா பிரச்சினையை அறியும் வகையில் அறிக்கையின் சம்பந்தமாக முதலமைச்சர் அவரிடம் கலந்து பேசி புதிய தீர்வை ஏட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முயற்சி செய்வேன் என ஈழத் தமிழர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.

தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சம்பந்தமான கேள்விக்கு அண்ணாமலைக்கும் மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றும் என்னுடைய நேர்மையை பேசுவதற்கு அண்ணாமலைக்கோ எல் முருகனுக்கோ பாஜகவுக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக கூறிச் சென்றார்.

Tags:    

Similar News