அனுமதியின்றி இயங்கிய மது பாருக்கு பூட்டு.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட மது பாரூக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.;
Update: 2024-04-05 08:01 GMT
சட்டவிரோத மதுபார்
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் தெருவுக்கடை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே சட்ட விரோதமாக பல மாதங்களாக அரசு அனுமதி பெறாமல் மது பார் செயல்பட்டு வருவதாக நாகர்கோவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான கிள்ளியூர் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு பகுதியில் மறைவான இடத்தில் மது பார் இயங்கி வருவது தெரியவந்தது. அதி காரிகள் சென்றதும் மது அருந்த வந்திருந்த நபர்கள் ஒட்டம் பிடித்தனர். அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தபோது, எந்த அனுமதியும் பெறாமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் பாரை பூட்ட வைத்தனர்.