காய்கறி வியாபாரத்தில் நஷ்டம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கரட்டாம்பட்டில் உள்ள இலுப்பையூர் பிரிவு சாலையில் காய்கறி வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-06-06 06:24 GMT
காய்கறி வியாபாரத்தில் நஷ்டம்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பைல் படம்
  • whatsapp icon

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கொள்ளிடம் செக்போஸ்ட் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் 31 வயதான பாஸ்கர். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.மேலும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் பாஸ்கர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் இந்நிலையில் துறையூர் அருகே காட்டாம்பட்டியில் உள்ள இலுப்பையூர் பிரிவு சாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புலிவலம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News