திருமங்கலம்: ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.;

Update: 2024-02-16 14:39 GMT

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

மதுரை திருமங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் புறம் வடக்கு தெருவை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் முருகன் வயது (39 ). இவர் ஜியோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல லட்ச ரூபாய் செலவு செய்தும் உடல்நிலை சரியாகாததால் முருகன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முடி திருத்தும் கடைக்கு செல்வதாக வீட்டிலிருந்து பெற்றோரிடம் தெரிவித்து சென்றதாக சொல்லப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்தபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட முருகனின் உடல் ரயில் எஞ்ஜின் முன்பு மாட்டிக் கொண்டு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கள்ளிக்குடி ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.

ரயில் இன்ஜின் முன்பு இளைஞர் அடிபட்டு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த கேட் கீப்பர் தகவல் தெரிவிக்கவே கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சம்பவம் குறித்து விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரயில் இன்ஜின் முன்பு உடல் மாற்றி உயிரிழந்த முருகனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News