நாமக்கல் வழியாக மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-17 16:48 GMT

வந்தே பாரத் ரயில் 

மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஜூன் 20ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில்,(தற்போது தகவலின் படி மேற்கண்ட நிகழ்ச்சி தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) அதற்கான சோதனை ஓட்டம் இன்று (ஜூன் 17) நடைபெற்றது.

மதுரை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஒசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய வந்தே பாரத் மூலம் திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும்.

மதுரை, பெங்களூருவுக்கு இடையே வர்த்தக, தொழில் தொடர்பு அதிகரிக்கும். மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு கிளம்பிய ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தை காலை 8.40 மணிக்கு கடந்து சென்றது. மதியம் 2 மணிக்கு பெங்களூரு சென்றடைந்தது.

மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நாமக்கல் ரயில் நிலைய போலீசார் ரயில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக/ ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News