மதுரை : வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் இன்று வெளியிட்டார்.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 14:24 GMT
மதுரை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார்.மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 26,37,601.இதில் ஆண் வாக்காளர்கள் 12,97,199, பெண் வாக்காளர்கள் 13,40,169, மூன்றாம் பாலின் வாக்காளர்கள் 233. வாக்காளர் பட்டியலில் புதிதாக பதிவு செய்வதற்கு மற்றும் ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-6, இந்திய கடவுச்சீட்டு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவு செய்வதற்கு படிவம்-64, வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கு படிவம் 6B, ஏற்கனவே பதிவு செய்துள்ள பெயரினை நீக்கம் செய்வதற்கு அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் சேர்ப்பு குறித்து ஆட்சேபணை தெரிவிக்க படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும், முகவரி மாற்றம் செய்வதற்கும், நகல் அட்டை பெறுவதற்கும், படிவம்-8-இல் விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். ஜனவரி1,2024 அன்று அல்லது அதற்கு முன்பே 18 வயது பூர்த்தி அடைந்த வாக்குச்சாவடி பகுதியில் சாதாராணமாக வசித்து வரும் இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். 27.10.2023 முதல் 09.12.2023 வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி மையங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம்.அல்லது www.nvsp.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். கைப்பேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய நான்கு நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 1950.பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.