வென்னிலையில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !
வென்னிலையில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வென்னிலையில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கீழ்பாகம் கிராமத்தில் உள்ள வென்னிலை என்கிற புகையிலை குறிச்சியானூர் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பாம்பாலம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இன்று அதிகாலை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனை தொடர்ந்து கணபதி வழிபாடு, புண்யாகம், வேதாகாரிச்சனை, யாக ஹோமம், மூர்த்தி ஹோமம், ஸன்னவதி ஹோமம்,பூர்ணஹூதி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று, மகாதீபா தாரனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசத்திற்கு எடுத்துச் சென்று, கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் உப்பிடமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.