நீடாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
நீடாமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-04 16:30 GMT
கோப்பு படம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழ் பாலம் பாப்பை மண் தோப்பு சுடுகாடு அருகில் கஞ்சா விற்பனை செய்த வலங்கைமான் தாலுகா கொட்டையூர் குடந்தை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் கார்த்திக் வயது 24 என்பவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளி தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது முன்தாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த நீடாமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.