வரதராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
Update: 2023-12-18 01:23 GMT
வரதராஜபெருமாள்
சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாத தொடக்கத்தினையொட்டி வரதாராஜபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் திருவெம்பாவை பாடல்கள் மற்றும் பெருமாள் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்,