மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்
கால்வாய் பணிகளில் அலட்சியம் காட்டுவதாக கூறி, செய்யாறு மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர்.
Update: 2024-02-19 08:54 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் அமைக்கும் போது மின்கம்பங்களை முறையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் கட்டைகள் வைத்து கட்டி ஆபத்தான நிலையில் பணி செய்து வருகின்றனர். மேலும் கால்வாயில் தேங்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி சாலை மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த செய்யாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து கலைத்தனர்