வாயில் கதவு இல்லாத மருதம் அரசு பள்ளி!

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சுற்றுச்சுவருக்கு உடைந்த பகுதியில் மீண்டும் பிரதான கதவு அமைக்க வேண்டும் என கோரிக்கை .

Update: 2024-03-02 09:17 GMT

மருதம் அரசு பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவருடன் பிரதான வாயில் கதவு அமைக்கப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்டும் பணி நடந்தபோது பொருட்களை ஏற்றி வந்த வாகனம் மோதியதில் ஒரு பகுதி இரும்பு கதவு உடைந்து விட்டது. இதனால் பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே புகும் ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்தில் அசுத்தப்படுத்துகின்றன. விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துவது, சூதாட்டம் ஆடுவது உள்ளிட்டவை அரங்கேறும் சூழல் உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சுற்றுச்சுவருக்கு உடைந்த பகுதியில் மீண்டும் பிரதான கதவு அமைக்க வேண்டும் என மருதம் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News