மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை துறைமுகம் பகுதியில் சாலையோர கடைகள் அகற்றத்தால் பெண் வியாபாரி உயிரிழந்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-06-17 05:02 GMT
சென்னை துறைமுகம் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த கடைகளை சென்னை மாநகராட்சி சமீபத்தில் அகற்றியது. இந்த நடவடிக்கையின் காரணமாக வியாபாரி கிருஷ்ணவேணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சாலையோர வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.