மாசி களரி : காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
சிவகங்கை காமாட்சியம்மன் கோவிலில் மாசி களரியையொட்டி நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-12 08:45 GMT
காமாட்சியம்மன்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மாசி களரி உற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் காமாட்சியம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி திருமஞ்சன பொடி, மாவு கரைசல், பால், தயிர், பஞ்சாமிர்தம், பழங்கள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்