மயிலாடுதுறை : "முடியலடா சாமி" விவசாயியின் பேச்சால் அதிர்ந்த குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-27 17:15 GMT
குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்த விவசாயி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சீர்காழி விவசாயி வீரமணி, "நான் 5 ஏக்கரில் விவசாயம் செய்துவருகிறேன். ஆற்றில் தண்ணீர் இல்லை. பம்புசெட் தொடர்ந்து காயில் கருகி புகைந்துவந்தது. தொடர் தடைகளால் நாற்றுவிட்டு நடவுசெய்ய 45 நாள் ஆகிவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு ஏதாவது தொல்லை வந்துகொண்டே உள்ளது. விவசாயத்தை கவனிக்க, எனக்கு ஆண் வாரிசுகள் இல்லை. எனவே, எனது 5 ஏக்கர் நிலத்தை அரசு காரியத்திற்கு எடுத்துக் கொண்டு அதற்கான விலையை அளிக்கவேண்டும் என்று கூறிய அவர், "விவசாயமே வேண்டாம் ஆளை விடுங்க சாமி" என்று பேச்சை முடித்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.