மகா காளியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்

மயிலாடுதுறை புதுத்தெரு ஶ்ரீ மகா காளியம்மன் கரக உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

Update: 2024-04-08 01:27 GMT

பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் 2வது புதுத்தெருவில் பழைமையும், பிரசித்தியும் பெற்ற ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயம் உள்ளது. ஶ்ரீமகா காளியம்மனின் சகோதரியாக அருகில் உள்ள கொத்தத்தெரு ஶ்ரீ பெரிய மாரியம்மன் கருதப்படுவதால் 1 முதல் 5 புதுத்தெரு வாசிகளால் இரு அம்பிகைகளுக்கும் பங்குனி மாதம் கடைஞாயிறு அன்று கரக உற்சவ திருவிழா நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி மாதம்’ ஸ்ரீ மகாகாளி அம்மன் கரக உற்சவதிருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலாவாக ஸ்ரீ மகாகாளி அம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு காவிரி கரையில் இருந்து இரு அம்பிகைகளுக்கும் பூக்கரகங்கள் எடுக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

Tags:    

Similar News