மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2023-11-24 04:57 GMT

புனித சவேரியார் ஆலய விழா கொடியேற்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில், புனித சவேரியார்   ஆலய வளாகத்தில், கொடி பவனி நடைபெற்றது. உதவிப்பங்குதந்தை மைக்கில் டைசன் பவனியை வழிநடத்தினார். புதுக்கோட்டை மறைவட்ட அதிபர் சவரிநாயகம் அடிகளார் ,கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் ,சகோதரத்துவம், தழைத்தோங்கவும், நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.  இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
Tags:    

Similar News