பாலம் கட்டுமான பணி குறித்து மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்

கன்னியகுமரி மாவட்டத்தில் பாலம் கட்டுமான பணி குறித்து மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.பழைய பாலத்தை இடிக்காமல் புதிய பாலத்தில் கட்டுமான பணி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

Update: 2024-01-20 07:11 GMT

பாலம் கட்டுமான பணி குறித்து மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் -  திருவனந்தபுரம் இரட்டை  ரயில் பாதை பணி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ரயில்வே பாலம் வழியாக  நாகர்கோவில் நெல்லை இடையே வாகனங்கள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பழைய பாலத்தை இடித்து அகற்றினால் மட்டுமே இரட்டை இரயில் பாதை அமைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்திற்கான பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பழைய பாலத்தை இடித்தால், நாகர்கோவிலில் மிகப் பெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.  இந்த நிலையில் மேயர் மகேஷ் நேற்று பாலம் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது ரயில்வே அதிகாரிகளிடம் பழைய பாலத்தை இடிக்காமல் புதிய பாலத்தில் கட்டுமான பணி மேற்கொள்ள  கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News