தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க நடவடிக்கை

தாவரவியல் பூங்காவில் உறைபனி தாக்கத்தால் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-12-29 15:00 GMT

பூங்காவில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலமாகும். இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு உதகையில் உறைபனி தாமதமாக கொட்ட தொடங்கி உள்ளது.

குறிப்பாக தாவரவியல் பூங்கா தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து காணப்படுகிறது.

இந்த பனியின் போது தேயிலை செடிகள், மலர் செடிகள், புற்க்கள் கருகி காய்வது வழக்கம். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்தாண்டு கோடை சீசனுக்காக மலர் நாற்றுகள் நடப்பட்டு உள்ளது.

இந்த மலர் நாற்றுகள் உறைபனியால் கருகாமல் இருக்க அவற்றை பாதுகாக்க கோத்தகிரி மிலார் என்னும் செடிகள் மூலம் பாதுகாக்கும் பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News