திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கூட்டம்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-19 07:23 GMT

ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கான பொதுவான நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர்,தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கான பொதுவான நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில், அரசியல் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சுவரொட்டிகள் மற்றும் கட்சி கொடிகள் போன்றவர்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் விதத்திலோ அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மசூதி, சர்ச் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் வாக்குகளை சேகரிக்க செல்லக்கூடாது என்றும் தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாறாட்டம் செய்தல்,போன்ற குற்ற செயலில் ஈடுபடக் கூடாது என்றும் மேலும் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதும் திரும்ப அழைத்துச் செல்வது, மற்றும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற முறைகேடான செயலில் ஈடுபடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News