பல் நோக்கு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் திறப்பு
தென்காசி மாவட்டம், நாராயணபுரம் பகுதியில் கட்டடப்பட்ட பல் நோக்கு கட்டிடத்தை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
Update: 2024-03-07 10:42 GMT
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஒன்றியம், நாராயணபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.