மேட்டூர் அணையில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு செய்யும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் நகர்புற மற்றும் நீர் வழங்கல்துறை அமைச்சர் கே. என். நேரு பங்கேற்றார்.

Update: 2023-10-28 08:31 GMT

மேட்டூர் அணையில் விடப்பட்ட மீன்குஞ்சுகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு ,மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணை, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோதையாறு, கொள்ளிடம், அமராவதி ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு தூண்டுதல் முறையில் நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும்போது மீன் குஞ்சுகளின் திறன் வெகுவாக அதிகரித்திடும். இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மூன்று லட்சம் மீன் விரலிகள் என்பது மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்க்கப்பட்டு முதல் கட்டமாக ஒரு லட்சம் மீன் விரலிகள் இன்று நகராட்சி நிர்வாகம் நகர்ப்புற மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் முன்னிலையில் மேட்டூர் காவிரி ஆற்றில் நான்கு ரோடு அனல் மின் நிலைய பாலபகுதியில் இருப்புச் செய்யப்பட்டது. இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2.70 லட்சமாகும். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சதாசிவம்,முன்னாள் எம்எல்ஏ கோபால், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News