கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நள்ளிரவில் போராட்டம்

மயிலாடுதுறையில் இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை கைது செய்ய கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-21 03:04 GMT

சாலை மறியல் 

மயிலாடுதுறை நகர் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித்குமார். இவர் திருஇந்தளூர் தெற்கு வீதியில் பைக்கில் சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொடூரமாக கொலை செய்து தப்பியோடியது. தப்பிச் சென்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து அஜித்குமார் உறவினர்கள் மற்றும் கலைஞர் காலனியை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு பேருந்து நிலையம் முன்பு சென்று அங்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் கண்ணன் என்பவரை 20 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. கலைஞர் காலனியை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.  இதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த அனைவரையும் ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பும் வேலையை போலீசார் செய்து வந்தனர் என்றும் தலித்துகளை வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர் என்று குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News