கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் அருகே மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து, கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2024-02-20 11:01 GMT

  திண்டுக்கல் அருகே மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து, கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

திண்டுக்கல் அருகே மண் அள்ளிய லாரிகளை கனிம வளத்துறை அதிகாரிகள் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆறு குளங்களில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மக்களின் நீர் ஆதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து அதிகாரிகள் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் இன்று திடீரென வீர வேஷம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி வறட்டாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு லாரி, மூன்று ஜே.சி.பி. வாகனத்தை பிடித்து கனிமவளத்துறை அதிகாரி விஜயராகவன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயுமென எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News