திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு சூறாவளி பிரச்சாரம்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரையை ஆதரித்து திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-12 06:33 GMT

 அமைச்சர் எ.வ.வேலு  பிரச்சாரம்

திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  உட்பட்ட ஆறு பகுதிகளில் . ஒன்றிய செயலாளர்கள் பொன்னேரி. சூரியகுமார்.உமா கண்ணுறங்கம். சிங்காரவேலன். புதுப்பேட்டை பகுதியில் சத்யா சதீஷ் மற்றும் கவிதா தண்டபாணி. கந்திலி பகுதியில் அசோக் குமார். காக்கங்கரை பகுதியில் முருகேசன். வெங்கலாபுரம் பகுதியில். மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில், திருப்பத்தூர் நகரப் பகுதியில்.எஸ். ராஜேந்திரன் தலைமையிலும் பிரசார கூட்டம் நடைபெற்றது.  ஒவ்வொரு இடங்களிலும் சுமார் 10 ஆயிரத்துக்கு குறையாமல் பொதுமக்கள்  பிரச்சாரத்தில்  கலந்து கொண்டனர். இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்.  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  நல்லதம்பி  ஆகியோர்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தில்.பேசிய அமைச்சர் ஏ.வா வேலு. திமுக.நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாதுரைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை எடுத்து பொது மக்களுக்கு நல திட்டங்களை செய்ததையும் பொது மக்களுக்கு எடுத்து  கூறி  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  பிஜேபி ஆட்சி இருந்தால் தமிழ்நாட்டை விற்று விடுவார்கள் எனவும் இந்தியா கூட்டணி கட்சிக்கு வாக்களியுங்கள் முதல்வர் மு க ஸ்டாலின் பெண்களுக்காகவே பல நல திட்டங்கள். செய்து வருகிறார். என்று கூறி  இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் வழங்கப்படும் நல திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி மற்றும் மாணவரணி மற்றும் திமுகவைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




Tags:    

Similar News