திருப்பூர் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைப்பு
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் தேசிய நகர்புற ஆரம்ப சுகாதாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
Update: 2024-01-08 07:27 GMT
திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தேசிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார திட்டத்தின் கீழ் 12 புதிய சுகாதார நிலையம் கட்டும் பணி, 3 அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி மற்றும் பள்ளி மேம்பாட்டு மானியம் மூல தான பணி மற்றும் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் 23 பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டம் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் ,ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் பபாலசுப்ரமணியம், மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.