கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைப்பு
திருப்பூர் மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் -நாடாளுமன்ற வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும் என பேச்சு தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர்மாவட்டம் மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நூலகம் திறக்கப்பட்டது.
மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து கட்சி கொடியினையும் ஏற்றி வைத்து சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் ச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு பெ சாமிநாதன். அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாநகராட்சி மேயர் மேயர் திலே தினேஷ்குமார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ்,ஈஸ்வரசாமி மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல் பத்மநாபன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி உள்ளிட்டார் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பயனுள்ளதாக நூலகம் திறந்த பட வேண்டும் இன்று திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது. மாலை முப்பெரும் விழா நடைபெற உள்ளது 100 சதவீத வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை நம்பி வெற்றி அளித்துள்ளனர். வெற்றிக்கு பிறகு நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான் நாடாளுமன்ற வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும் என பேசினார்.