இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என பாராட்டப்படுபவர் மு க ஸ்டாலின் மட்டுமே என கோ.வி. லெனின் தெரிவித்தார்.
திருத்தணி நகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை பொதுக்கூட்டம் கமலா திரையரங்கம் அருகே நகர செயலாளர் வினோத்குமார் தலைமையிலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சந்திரன் முன்னிலையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் கோவி. லெனின் கலந்துகொண்டு , சிறப்பான செயல் திட்டத்தையும், எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையை முன் நிறுத்தி சிறப்பான பல அறிக்கையை வெளியிட்டு அதனை விரைவாக நடைமுறைபடுத்தி வரும் இந்தியாவின் தலை சிறந்த முதல்வர் என அனைவராலும் பாராட்டு பெற்ற ஒரு முதலமைச்சர் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான் என பல கருத்துக்களை விளக்கமாக கூறி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட பொருளாளர் மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிரணியினர் ,பொதுமக்கள் என திரளாக கலந்துக்கொண்டனர்.