தூத்துக்குடியில் மிதமான மழை

அதிகபட்சமாக 48 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

Update: 2023-12-17 06:58 GMT

தூத்துக்குடியில் மிதமான மழை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை இருக்கக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு விட்டு விட்டு மழை பெய்து வந்தது இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில்பட்டி சாத்தான்குளம் விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

இன்று காலை ஆறு மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 48 மில்லி மீட்டர் மழையும் குலசேகரபட்டினத்தில் 32 மில்லி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 29 மில்லி மீட்டர் மழையும் விளாத்திகுளத்தில் 24 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது மாவட்ட முழுவதும் சராசரியாக 298 புள்ளி 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News