கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் நவீன கண்காணிப்பு ரேடார் !
கன்னியாகுமரியில் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தை 1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம்தேதி அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்ரீ ராஜ்பகதூர் திறந்துவைத்தார்.
கன்னியாகுமரியில் கோவளம் ரோட்டில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தை 1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம்தேதி அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்ரீ ராஜ்பகதூர் திறந்துவைத்தார். இந்த கலங்கரை விளக்கம் தரைமட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும் கடல் மட்டத்தில் இருந்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சுமார் 25 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கத்தில் பாதுகாப்பு கருதி நவீன "ரேடார்" கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சென்று கன்னியாகுமரி கடற்கரையைப் பார்ப்பதற்கு வசதியாக நவீன "லிப்ட்"வசதி அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது பழைய ரேடார் கருவியை மாற்றி "அதி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார்" கருவி பொருத்தும் வகையில் ராட்சத கிரேன் மூலம் பழைய ரேடார் கருவியை மாற்றி புதிய ரேடார் கருவி அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த அதி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார் மூலம் 25 நாட்டிங்கல் கடல் தொலைவில் வரும் கப்பல்களை ஸ்கேன் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதனால் கடல் மார்க்கமாக ஊடுருவல் மற்றும் கடத்தல் பொருட்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும் எனவும், கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அதி நவீன கடலோர கண்காணிப்பு ரேடார் நேற்று இரவு முதல் பயன்பாட்டுக்கு வந்தது.