மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு - ராமகிருஷ்ணன்

மாநில உரிமைகளை பறித்து நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே கேள்விக்குறியாக மாறிவிடும் என சேலத்தில் நடந்த பிரசாரத்தின் போது சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேசினார்.

Update: 2024-04-12 07:58 GMT

ராமகிருஷ்ணன் பிரசாரம் 

இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி. எம்.செல்வகணபதியை ஆதரித்து சாமிநாதபுரம் பகுதியில் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். மாநில உரிமைகளை பறித்து நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பின் காரணமாக அன்றாட மக்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாக மாறி உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News