அவினாசி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தந்தை மகனுக்கு கத்தி குத்து

அவிநாசி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தந்தை மகனுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-28 14:09 GMT
அவினாசி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தந்தை மகனுக்கு கத்தி குத்து

காவல் நிலையம்

  • whatsapp icon

அவிநாசி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தந்தை மகனுக்கு கத்தி குத்து! அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 50).இவரது மகன் யுவராஜ் (28 )இவருக்கும் திருப்பூரை சேர்ந்த நிவேதன் (33) ரகு (31) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அவிநாசி - கோவை பைபாஸ் ரோடு ஐயப்பன் கோவில் அருகே இருதரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது தங்கராஜை நிவேத,ன் ரவி ஆகியோர் கத்தியால் குத்தவந்ததாகவும் அப்போது தங்கராஜ் கையால்,

தடுத்தபோது கைவிரல்களில் ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதை தடுக்க வந்த மகன் யுவராஜுக்கும் நிவேதன் மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நான்கு பேரும் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News