ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ. 1.71 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் ஸ்கூட்டரில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

Update: 2024-03-10 13:31 GMT

திருட்டு

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலகக் கண்காணிப்பாளரின் ஸ்கூட்டரில் இருந்த ரூ. 1.71 லட்சம் திருடிய மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஏ.இளங்கோவன் (59). இவர் மாநகராட்சி அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய சொந்த செலவுக்காக வங்கியிலிருந்து ரூ. 2 லட்சம் எடுத்து செலவு போக மீதமிருந்த ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரொக்கத்தை ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியிலுள்ள பெட்டியில் வைத்து பூட்டியிருந்தார். இவர் மார்ச் 7 ஆம் தேதி தெற்கு வீதியிலுள்ள வங்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஸ்கூட்டரை எடுப்பதற்காக வந்தார். அப்போது, இருக்கை பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News