மார்த்தாண்டம்  மேம்பாலத்தின் பள்ளம் - விஜய் வசந்த் எம்.பி ஆய்வு

மார்த்தாண்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலம் சேதமடைந்த இடத்தில் எம்.பி. வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-07 16:01 GMT

விஜய் வசந்த் எம்.பி.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வழியாக செல்லும் திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு தீர்வு காணும் வகையில் குழித்துறையிலிருந்து  பம்மம் வரை 2018 - ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்க்காக ரூ.222 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேற்பகுதியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு பாலத்தின் அடியில் உள்ள இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி உள்ளது.     

 இதுகுறித்து தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள பள்ளத்தை வாகன ஓட்டிகள் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அந்த இடத்தை சுற்றி பேரிகார்ட் அமைத்து தடுப்பு அமைத்துள்ளனர்.       இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த்   சம்பவ இடத்திற்கு வந்து உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.    இதை அடுத்து  தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடமும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்,

Tags:    

Similar News