தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்

தொப்புர் கணவாயில் கண்டெய்னர் லாரி கார்கள் மற்றும் மினி லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-02-29 01:31 GMT
விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்கும் பணி
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி அருகே சேலம் டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாயில் கண்டைனர் லாரி ஒன்று 3 கார்கள் மற்றும் ஒரு மினி லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வாகனங்கள் தொடர்ந்து விபத்திற்குள்ளானதில் தொப்பூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூர் காவல் துறை மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்த்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News