கரூரில் மை வி3 நிறுவனத்தின் சேவை அலுவலகம் இன்று துவக்கம்
கரூரில் மை வி3 நிறுவனத்தின் சேவை அலுவலகம் இன்று துவக்கப்பட்டது.;
Update: 2024-02-25 10:54 GMT
மை வி3 நிறுவனத்தின் சேவை அலுவலகம்
கரூரில் மை வி3 நிறுவனத்தின் சேவை அலுவலகம் இன்று துவக்கம். உலகிலேயே, முதன்முறையாக, தன்னுடைய நிறுவனம் ஈட்டும் வருவாயை அந்த நிறுவனத்தை சார்ந்துள்ள நபர்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் ஒரே நிறுவனமாக செயல்பட்டு வருகிறது மை வி3 நிறுவனம். தமிழகத்தில் தற்போது விரைவாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதன்மையானது மை வி3 நிறுவனம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், நிறுவனம் தயாரித்து சந்தைப்படுத்தும் பொருள்களுக்கான விளம்பரத்தை இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் பார்ப்பதற்காக, குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் வழங்கி வருகிறது என்பதும், அதன் மூலமாக இந்த நிறுவனத்தில் இணைந்த அனைத்து நபர்களும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்து வருகின்ற சூழலும், இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது. தமிழகத்தில் மை வி3 நிறுவனத்திற்கு ஏறக்குறைய ஆயிரம் ஸ்டோர்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தில் இணையும் நபர்களுக்கு அவர்களது தேவைக்கேற்றவாறு சேவை நிறுவனங்களையும் தமிழகம் முழுவதும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும் இன்று 15 சேவை நிறுவனங்களை துவக்கி உள்ளது. இதில் ஒரு நிறுவனமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மை வி3 சேவை நிறுவனம் இன்று துவக்கப்பட்டது. துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த மண்டல நிர்வாக இயக்குனர்களுக்கு, மை வி3 குடும்பத்தினர் இசைக்கருவிகள் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் அலுவலகத்தில் குத்து விளக்கு ஏற்றி மை வி3 சேவை அலுவலகத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மை வி3 உறுப்பினர்கள் நிர்வாகிகள், மை வி3 குழுவை வழி நடத்துபவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.