மாயமான நர்சிங் கல்லூரி மாணவி மீட்பு : பெற்றோரிடம் ஒப்படைப்பு
கண்ணுமாமூடு பகுதியில் மாயமான நர்சிங் மாணவி கருங்கல் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் கண்ணமாமுடு பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா.இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். வீட்டில் இருந்த ஆஷிகா நேற்று திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் லீனா பளுகல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆஷிகாவை தேடி வந்த நிலையில் மாணவி ஆஷிகா கருங்கல் பேருந்து நிலைய அருகே சுற்றி திரிந்தார்.சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கருங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற கருங்கல் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது மாயமான நர்சிங் மாணவி ஆஷிகா என்பது தெரியவந்தது.இதையடுத்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்த கருங்கல் போலீசார் மாணவியை ஒப்படைத்தனர்.