பள்ளிபாளையம் அருகே பெண்களிடம் வழிப்பறி

பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளப்பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால் இரவு நேரங்களில் ரயில்கள் வேகம் குறைவாக செல்வதை பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

Update: 2024-06-17 12:17 GMT

பெண்களிடம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெள்ளி குட்டை என்ற பகுதியில் ரயில்வே தண்டவாளங்களில் இணைப்பு பழுதடைந்துள்ளதால் அவற்றை பராமரிக்கும் பணி தற்பொழுது கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது இதன் காரணமாக இரவு நேரங்களில் வரும் விரைவு ரயில்கள் அனைத்தும் ஆனங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து காவேரி ரயில் நிறுத்தம் வரை பத்து கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் வரையிலான மிக குறைந்த வேகத்தில் செல்ல இயலும் இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் இரவு நேரங்களில் ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களிடமிருந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் ரயில் பயணிகளிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கல்யாணி என்ற பெண்ணிடம் 1.5 தங்க செயின் மற்றும் ராய்ச்சூரில் இருந்து ஈரோடு வரை வந்த குர்லா எக்ஸ்பிரஸில் பயணம் செய்த மணிமேகலை என்ற பெண்ணிடம் 1.5 பவுன் தங்கச் செயினும் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஜெயசித்ரா என்ற பெண்ணிடம் இருந்து ஒரு பவுன் தங்கச் செயினும் பறித்து கொண்டு கொள்ளையர்கள் ஓடும் ரயிலில் இருந்து தப்பிச் சென்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள் ஈரோடு மற்றும் கோவை ரயில்வே பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களை குறி வைத்து கொள்ளையர்கள் செயின் பரிப்பில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது

Tags:    

Similar News