அச்சிறுபாக்கம் அருகே நகை பாலிஷ் போட்டு தருவதாக கூறி திருடிய மர்மநபர்கள்
அச்சிறுபாக்கம் அருகே நகை பாலிஷ் போட்டு தருவதாக கூறி மர்மநபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 10:16 GMT
காவல் நிலையம்
அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முனுசாமி மனைவி திருவேணி.. இவர் நேற்று, தன் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இரு நபர்கள் வந்து, நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறினர். இதை நம்பிய திருவேணி, தன் கையில் அணிந்திருந்த 6 சவரன் தங்க வளையல்களை கழட்டி கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள், தங்க வளையல்களை திருடி சென்றனர். இதுகுறித்து திருவேணி, ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.