முதலமைச்சர் விருது வென்ற நாமக்கல் நகர காவல் நிலையம்
மாநில அளவிலான சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது வழங்கினார்.;
Update: 2024-01-28 06:04 GMT
முதலமைச்சரிடம் விருது வாங்கிய இன்ஸ்பெக்டர்
சென்னையில் நடைபெற்ற 75-ஆவது குடியரசு தின விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வில், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக மாநில அளவில் நாமக்கல் நகர காவல் நிலையம் இரண்டாமிடத்திற்கு தோ்வு செய்யப்பட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதற்கான விருதை நாமக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளா் சங்கரபாண்டியனிடம் வழங்கிப் பாராட்டினார் மாநில அளவில் சிறந்த காவல்நிலையத்திற்கான விருதுபெற்ற, நாமக்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.