இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.மணிமாறன் தலைமையில் தோழர் தா. பாண்டியனின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2024-02-26 14:17 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராசிபுரம் நகர ஒன்றிய குழு சார்பில் மலர் தூவி கொள்கை முழக்கங்கள் எழுப்பி செவ்வணக்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். சி.பி.ஐ., முன்னாள் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் S.மணிவேல், திமுக ராசிபுரம் நகர செயலாளர் N.R.சங்கர், திமுக முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் V.பாலு, சி.பி.ஐ., மாவட்ட துணைச் செயலாளர் டி. என்.கிருஷ்ணசாமி, அனைத்திந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் மீனா, ராசிபுரம் காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் முரளி, மதிமுக., மாவட்ட அவைத்தலைவர் ஜோதிபாசு, சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் கைலாஷ், சி. பி.ஐ வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல், புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைத் தலைவர் தேவகி, ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகி கண்ணன், விசிக ., நகர துணை செயலாளர் சுகுவளவன், விசிக நகர் மன்ற உறுப்பினர் பழனிசாமி, தூய்மை தொழிலாளர் பேரவை பெருமாள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முகமது, AIYF மாவட்ட செயலாளர் மோகன் குமார், திராவிட விடுதலைக் கழகம் நகர செயலாளர் பிடல் சேகுவேரா, மனிதநேய மக்கள் கட்சிநகர செயலாளர் ரப்பானி, சிபிஐ நகரப் பொருளாளர் சலீம், நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் மாதேஸ்வரி, இளைஞர் பெருமன்றம் ராசிபுரம் தாலுகா தலைவர் வேம்பு மற்றும் மாணிக்கம்,மணி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். இறுதியாக R.செங்கோட்டையன் நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News