நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

Update: 2023-12-01 18:56 GMT

அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளான மெட்டாலா மற்றும் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் பி. தங்கமணி ஆலோசனையின்படி அஇஅதிமுக கழகத்தின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக கழக செயலாளர் சரவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பேரூர் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழகத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் , பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த பூத் கமிட்டி நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,சரோஜா, கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அனைத்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் சரியான முறையில் உள்ளதா என சரிபார்த்து பின்னர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலாவதி, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சரவணன், நாமகிரிப்பேட்டை சேர்மன் ராஜேந்திரன், நாமகிரிப்பேட்டை பேரூர் கழக செயலாளர் மணி கண்ணன், மற்றும் சீராப்பள்ளி பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் குமார் ,ஒன்றிய கழக ஐ டி விங் செயலாளர் பிரபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News