நந்தியாற்றின் உயர்மட்ட பாலம் சாலை சேதம்

சேதமடைந்த பாலத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-12-20 03:31 GMT

சேதமடைந்த பாலம்

திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கோரமங்கலம் அருகே நந்தியாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பல கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டி வாகனங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக, 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில் உயர்மட்ட பாலத்தை முறையாக நெடுஞ்சாலை துறையினர் பராமரிக்கவில்லை. இதனால் பாலத்தின் மீது போட்டப்பட்ட சிமென்ட் மற்றும் தார்ச் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலத்தின் மீது, ஏழு இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் நாளுக்கு நாள் சேதம் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தை கவனிக்காமல் ஓட்டும் போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர். சிலர் உயர்மட்ட பாலத்தை கடக்கும் போது அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். உயர்மட்ட பாலத்தின் மீது சாலை சேதமடைந்து உள்ளன. பல முறை வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந்தால் உயர்மட்ட பாலம் உறுதித்தன்மையை இழந.ெதுவிடும் என, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் கோரமங்கலம் உயர்மட்ட பாலத்தை நேரில் வந்து ஆய்வு செய்து சீரமைப்பு பணிகள் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News