தேசிய நுகர்வோர் தினம் : பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் 24ம் தேதி தேசிய நுகர்வோர் தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.அதனை முன்னிட்டு நேற்று விருதுநகரில் மாவட்ட நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் விருதுநகர் மாவட்ட உபயோகிப்பாளர் கமிட்டி சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் பொருள்களை தேர்வு செய்யும் முறை, அனைத்து வகையான அபாயகரமான பொருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, பொருள்களின் தரம் மற்றும் செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை, போன்றவைகளை பற்றி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு உதவிபெறும் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பிமேல்நிலைப் மற்றும்பள்ளியில் ஆரம்பித்து கிருஷ்ணமாச்சாரி ரோடு, மேலரதவீதி, தேசபந்து மைதானம், பழைய பேருந்து நிலையம், வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிவடைந்தது. மேலும் இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், குடிமைப் பொருள் வட்டாட்சியர் செந்தில், மாவட்ட தலைவர் முகமது எஹியா, மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாநில தலைவர் சுப்பிரமணி, ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்சிகான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.