தேசிய நகர்வோர் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
தேசிய நுகர்வோர் விழிப்புணர் பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-23 13:41 GMT
பேரணியில் பங்கேற்ற மாணவிகள்
தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி குடியரசு துவக்கினார் அவருடன் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மயிலாடுதுறை தாசில்தார் நகர் மற்றும் வட்ட வழங்க அலுவலர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு தேசிய நுகர்வோர் தின நுகர்வோருக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.