நாட்றம்பள்ளி: ஆபத்தான பனை மரத்தை அகற்ற கோரிக்கை
Update: 2023-12-01 06:17 GMT
பனை மரம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் வார சந்தை மைதானம் உள்ளது! வாரம் ஒரு முறை திங்கட்கிழமை நடைபெறும் சந்தையில் ஆயிரம் கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூடுகின்றனர் இந்த வார சந்தையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு மாடு கோழி உள்ளிட்டவைகளை விற்கவும் வாங்கவும் பொதுமக்கள் கூடுகின்றனர். இந்த சந்தை மைதானத்தில் நீண்ட காலமாக உயர்ந்த பனைமரம் ஒன்று பட்டுபோய் காய்ந்த நிலையில் காட்சியளிக்கின்றது. இந்த பனைமரம் எந்த நேரத்திலும் விழுந்து உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்படுத்துவதற்கு முன்பு துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மரத்தை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.