நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் நாமக்கல் மாவட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை | கிங் நியூஸ் 24x7
நவோதய அகாடமி நாமக்கல்
பிப்ரவரி 17: நாமக்கல்லில் மாவட்ட அளவில் PGP International பள்ளியில் Nathan Chess Academy, மற்றும் King Chess Academy இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று செஸ் போட்டியை நடத்தினார்கள். அதில் நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நான்காம் வகுப்பு செல்வன் P. தமிழ் இனியன், ஏழாம் வகுப்பு SK. சஞ்சிவன் சுரேஷ் மற்றும் V.D சித்தார்த் ஆகியோர் 12 வயது பிரிவிலும், 16 வயது பிரிவிலும் முதல் பரிசை பெற்று இளம் வயதில் சாதனைப் படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற அபாக்கஸ் FOUNDATION LEVEL போட்டியில் நவோதயா பள்ளி மாணவன் ஏழாம் வகுப்பு ஆகாஷ் தேவ் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
மேலும் கரூர் பரதம் சிலம்பம் அகாடமி நடத்திய மாவட்ட அளவில் சிலம்பப் போட்டியில் நவோதயா பள்ளி மாணவி நான்காம் வகுப்பு G.ஷனுமித்ரா சேர, சோழ, பாண்டியர் விருதினைப் பெற்றுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற புத்தக கண்காட்சி திருவிழாவில் நவோதயா அகாடமி பள்ளி மாணவிகள் ஆறாம் வகுப்பு V.வேத வியாசினி மற்றும் V.வேதவள்ளி கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியம் ஆடி சான்றிதழ் பெற்றுள்ளார். இன்று பள்ளியில் நடைபெற்ற காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் அனைவருக்கும் பள்ளியின் நிர்வாகி திரு. கா தேனருவி அவர்கள் சான்றிதழ்களையம், மெடல்களையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பள்ளி முதல்வர். ஆசிரியர்கள், மாணவியர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.