திருமருகல் அருகே சாலையோரம் எரியூட்டப்படும் குப்பைகளால் அவதி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சாலையோரம் எரியூட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2024-06-16 13:55 GMT
புகையால் மக்கள் அவதி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சாலையோரம் எரியூட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி திருமருகல் அருகே சாலையோரம் எரியூட்டப்படும் குப்பைகளால் அப்பகுதி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலையோரம் எரியூட்டப்படும் குப்பை திருமருகலில் இருந்து திருச்செங்கட்டாங்குடி,திருக்கண்ணபுரம்,கோட்டூர்,வடகரை வழியே திருவாரூர் செல்லும் மெயின் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக திருமருகல், திருச்செங்கட்டாங்குடி, திருக்கண்ணபுரம்,ராதாரம்பூர்,கோட்டூர்,வடகரை,தென்கரை,

திருப்பனையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் திருவாரூர் சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.மேலும் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் திருவாரூர்,நன்னிலம்,மயிலாடுதுறை,கும்பகோணம் செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆண்டிபந்தல் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முழுவதும் வடகரை ரயில்வே கேட் அருகில் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது.இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மலை போல் குவிந்து கிடைக்கும் நிலையில் அடிக்கடி இந்த குப்பைகளை எரித்து விடுகின்றனர்.

இதனால் ஏற்படும் புகையால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாய நிலை உள்ளது. நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகள் எரியூட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

Tags:    

Similar News