மேலப்பாளையத்தில் சகதிகளான சாலைகள்
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையில் சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 06:22 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (மே 14) காலை முதலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் மேலப்பாளையத்தில் தொடர்ந்து நேற்று முதல் மழை பெய்வதால் பஜார்,சந்தை சாலைகளில் சகதிகள் தேங்கி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இவ்வாறு சாலைகள் காட்சியளித்ததால் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனமுடன் சென்றனர்.