ராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு அமாவாசை சிறப்பு அலங்காரம் !
ராசிபுரம் ஸ்ரீ காளியம்மனுக்கு அமாவாசை சிறப்பு அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-04-08 09:46 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் அன்றும் மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறும். அதன்படி திங்கட்கிழமை அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாரணை நடைபெற்றது. ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.