நாலுமாவடி சபையில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத் தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்  நடைபெற்றது. 

Update: 2024-01-02 13:15 GMT

வாக்குதத்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழியத்தில் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டு தோறும் புத்தா ண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம்  மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் குழுவினர் புத்தாண்டு வாக் குத்தத்த பாடல்களை பாடினர். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார் என்ற தலைப்பில் பாவத்துக்கு விளக்கிப் பாதுகாப்பார்.

போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பார், எல்லா தீமைக்கும் விளக்கிக் காப்பார் என்ற கருத்தின் அடிப்படையில் புத்தாண்டு வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி.லாசரஸ்  கொடுத்தார்.நிறைவாக சிறப்பு பிரார்த்தனையையும் சகோ. மோகன் சி.லாசரஸ்  ஏறெடுத்தார்.

புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டத்தில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அமைச்சருக்காக சகோ. மோகன் சி. லாசரஸ் சிறப்பு ஜெபத்தை ஏறெடுத்தார். அமைச்சருடன் அவரது உதவியாளர் கிருபாகரன் மற்றும்திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

   புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவடைந்ததும் ஊர்களுக்கு பொதுமக்கள் திரும்பிச் செல்வதற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலா ளர் செல்வக்குமார் தலைமையில் உட னுழியர்கள் செய்திருந்தனர். கூட்டத் திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குரும்பூர் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News